தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.