மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கன்னங்குடா பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னங்குடா பிரதான வீதியானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு
முகங்கொடுக்க நேரிடுகிறது.
1976ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட வீதியானது, மீள இதுவரையில் புனரமைக்கப்படாத நிலையிலேயே காணப்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கன்னங்குடா பிரதான வீதியை மண்டபத்தடி,கரையாக்கன்தீவு, கன்னங்குடா உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.
கன்னங்குடா மகா வித்தியாலயம் மாணவர்களும் இவ் விதியூடாகவே பயணிக்கின்றனர்.
குன்றும் குழியுமாக காணப்பட்ட பகுதிகள் தற்காலிகமாக பிரதேச மக்களால் நிரவப்பட்டுள்ளது.மழை காலங்களில் இவ் வீதியை மூடி நீர் தேங்கி நிற்பதால், நீர் வடிந்தோடும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்த நேரிடுவதாக கூறும் மக்கள், தேர்தல் காலங்களில்
ஆளுந்தரப்பை பிரதிநிதித்துப்படுத்துவோரிற்கே வாக்குகளை வழங்கியதாகவும், அவர்களும் வீதிப் புனரமைப்புத் தொடர்பில் பாராமுகமாக செயற்படுவதாகவும்
கவலை வெளியிட்டுள்ளனர்.
Home கிழக்கு செய்திகள் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாது பாராமுகமாக செல்லும் அரசியல்வாதிகள்- மட்டு.கன்னங்குடா மக்கள் ஆர்ப்பாட்டம்