கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற விசேட தொடருந்திலிருந்து விழுந்து சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த சிறுவன், தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.