








தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் இன்றைய தினம் நல்லை ஆதின முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். திருகோண மலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திரைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சில விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்,