தொழிற்சங்கங்களை முடக்குவதற்கான செயற்பாடுகளேமுன்னெடுக்கப்படுகின்றன – ரவி குமுதேஸ்

0
128
  • ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை காண்பித்து தொழிற்சங்கங்களை முடக்குவதற்கான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது என்று சுகாதார ஊழியர்கள் சம்ளேனத்தின் ஒருங்கமைப்பாளர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமானது தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்று அந்தக் கடனை நாட்டு மக்களுக்கு காண்பித்து தொழிற்சங்கங்களை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது

மறுபுறத்தில் தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக நாட்டின் சகல சொத்துக்களையும் விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

நாட்டில் நட்டமடையும் நிறுவனமமொன்று இருக்குமாயின் அந்த நிறுவனம் எதற்கான நட்டமடைகின்றது என்பதை முதலில் ஆராய வேண்டும்.

அரசியலில் இருக்கும் மோசடிமிக்க நிர்வாக முறைமை காரணமாக அந்த நிறுவனம் நட்டமடைந்திருக்கும்.

அந்த நிறுவனத்தையே தனியார்துறைக்கு விற்பனை செய்யும்போது அதற்கூடாக இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

அரச நிர்வாக முறையிலேயே மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

அடுத்ததாக அரச சேவையை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டும்.

அரச நிறுவனங்கள் நட்டமடைந்தமைக்கான பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்க வேண்டும் என்றார்.