தொழிற்சங்கப் போராட்டத்தால் ஸ்தம்பித்தது அம்பாறை அக்கரைப்பற்று

0
136

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலை நிறத்தப் போராட்டத்தால், அம்பாறை அக்கரைப்பற்றிலும் இன்று அரச வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், தபால் நிலைய ஊழியர்கள் கடமைகளுக்குச் சமூகமளிக்கவில்லை.

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள அரச வங்கிகள் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்த நிலையில், தனியார் வங்கிகள் வழமை போன்று செயற்பட்டன. ஆசிரியர்களின் பணிப் பகிஸ்கரிப்பால் இன்று நடைபெறவிருந்த மூன்றாம் தவணைப் பரீட்சையானது பாடசாலைகளில் நடைபெறவில்லை.

சில பாடசாலைகளில் அதிபர்கள் வருகை தந்ததபோதிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்திருந்தது. தொழிற்சங்க போராட்டத்தால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைள் பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டனர்.