மின்சார விலை திருத்தத்தின் போது தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களின் மின்சாரக் கட்டணம் சுமார் 31 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் மின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.