தொழிலுரிமையைக் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்

0
145

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான தொழில் நியமனத்தைக் கோரி இன்று காரைதீவுச் சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏனைய மாவட்டங்களை போன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரி நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வயது போவதன் காரணமாக தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கவலை வெளியிட்டனர்.
போராட்டக்காரர்கள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.

கவனயீர்ப்புப் போராட்டம், அடையாள பேரணியாகவும் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மற்றும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஆகியோரும் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர்.