உலகில் சிறுவர் தொழுநோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் 5 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் உள்ளது.நாட்டில் பதிவாகும் தொழுநோயாளர்களில் 10% பேர் சிறுவர் தொழுநோயாளர்களாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.ஜனவரி 28 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழுநோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட தௌிவுபடுத்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.