தூக்கிலிட்டு உயிரிழந்த நகைக்கடை உரிமையாளரின் இறுதிக்கிரியை
பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது,
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில்உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் நாவலர் வீதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிலிட்டு உயிர் மாய்த்திருந்த நிலையில் உயிரிழந்தவரின் இறுதிகிரியைகள் இன்றைய தினம் ஆனைப்பந்தியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று கோம்பையின் மடல் இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம் பெற்ற நிலையில்
பொலிஸ் உயர் அதிகாரியின் பணிப்பின் பேரில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு இறுதி ஊர்வலத்தில் வீதிகளில் பொலிசாரின் பிரசன்னமும் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.