நல்லூர்   ஆலயச்சூழலில்  நாய்கள் தொல்லை! மாநகர சபையை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

0
34

நல்லூர் கந்தசாமி கோவில் ஆலயச்சூழலில் அங்கபிரதஸ்டை செய்பர்களுக்கு ஆலயச்சூழலில் நடமாடுகின்ற நாய்கள் தொல்லை தருவதாகவும் இது தொடர்பில் யாழ்.மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த நிலையிலும் இன்று வரை யாழ்.மாநகர சபை அதற்குரிய நடடிக்கைகளை எடுக்காதிருப்பது வருத்தமளிக்கின்றது.

இவ் விடயம் தொடர்பில் இன்று அதி காலை 5 மணி தொடக்கம் அடியார்கள் மிகுந்த அதிருப்தியினை யாழ்.மாநகர சபையின் உற்சவகால பணிமனைக்கு வந்து வெளியிடதோடு யாழ்.மாநகர சபையின் உற்சவகால பணியாளர்கள் தங்குமிடத்திற்கு சென்று பணியாளர்களினை அழைத்து வந்து பிரதிஸ்டை செய்யும் மணல் மீது காணப்பட்ட நாயினுடைய எச்சங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததினையும் காணகூடியதாக இருந்தது.

கடந்த காலங்களில் குறித்த விடயங்கள் எவ்வாறு கையாளப்பட்டது என்ற விடயங்கள் தெரிந்திருந்த போதும் அதனைச் செயற்படுத்திய போது தற்போது குறித்த விடயத்தில் யாழ்.மாநகi சபை காத்திரமான பணியினை செய்யாமல் இருப்பது ஏற்புடையல்ல.

அதே நேரம் நேற்று இரவு போட்டப்பட்ட மணல் சில இடங்களில் பரவாமல் காணப்பட்டது. அதுவும் அங்கபிரதஸ்டை செய்கின்றவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தினை கொடுத்தது. இன்று காலை பக்தர்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் அதிருப்திகள் கிடைக்கப்பெற்ற நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவுக்காக கடமையாற்றுகின்ற சாரண சிறார்கள் அதிகாலையில் குறித்த மணலை பரவியதையும் ஆலயச் சூழலில் காணப்பட்ட நாயினுடைய எச்சங்களை அகற்றி தூய்மைப்படுத்துவதிலும் நம்மை ஈடுபடுத்தியமையினை காணவும் முடிந்தது.

நல்லூர் கந்தசுவாமி பெருந்திருவிழாவின் அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை குறித்த நாட்களில் ஆலயச்சூழலினை குறிப்பாக அங்கபிரதிஸ்டை செய்யும் பகுதியினை கண்காணிப்புடன் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது யாழ்.மாநகர சபையின் பாரம்பரியமிக்க வரலாற்று கடமை என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்