டெங்கு பரவும் சூழல், நீதிமன்றில் வழக்கு தாக்கல்…
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த பல நாட்களாக டெங்கின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த 02.01.2024 மற்றும் 03.01.2024 ம் திகதிகளில் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பிரபல தனியார் வைத்தியசாலை, தனியார் விடுதி, திருமண மண்டபம், உணவகம் உட்பட டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 07 இடங்கள் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து 07 பேரிற்கும் எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. வழக்குகள் இன்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதிமன்றால் ஐவரிற்கு 21,000/= தண்டம் விதிக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இரண்டு வழக்குகள் எதிராளிகள் வருகைதராத காரணத்தினால் விசாரணைக்காக திகதி இடப்பட்டது…