




நல்லூர் பிரதேச சபையினுடைய வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டம் இன்று நல்லூர் பிரதேசசபை முன்றலில் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த திட்டத்திலே 57 பயனாளிகளுக்கான துவிச்சக்கர வண்டிகளும்இ 44 பயனாளிகளுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தி இலக்கினை அடையும் வகையில் சபையின் வருடாந்த வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின்கீழ் சபை ஆளுகைக்குள் வதியும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளை வேண்டிநிற்கின்ற மக்களுக்காக நல்லூர் பிரதேச சபையானது இந்த உதவித்திட்டங்களை இன்றைய தினம் வழங்கியது.
இந்த நிகழ்வானது பிரதேச சபையின் செயலாளர் திரு.ஜெலீபன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.சிறீவர்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
இவ்வாறான உதவிகளை நல்லூர் பிரதேச சபையானது வருடாவருடம் வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.