29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நள்ளிரவு முதல் மின்சார கட்டணங்கள் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, வீட்டு பாவனைக்கான மின்சார கட்டணம் 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு உட்பட்ட பிரிவுக்கு, 65 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அலகொன்றுக்கான கட்டணம், 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாதாந்த நிலையான கட்டணத்தை, 400 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -spot_img

Latest Articles