நாடளாவிய ரீதியில் 3 இலட்சம் இணைப்புக்கள் துண்டிப்பு

0
127

நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களில் சுமார் 3 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்களை சீர் செய்வதற்கு மேலதிக ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் இணைப்புத் துண்டிப்பு தொடர்பில் 1987 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பதில் சிரமம் காணப்படுவதாகவும் அதனால் குறித்த இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்க முடியும் எனவும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.