நாடாளவிய ரீதியில் இன்று க.பொ.த. உயர்தர பொது தகவல் தொழில் நுட்ப பரீட்சை

0
288

கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் 60 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெற்றது.

2019, 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பரீட்சை இடம்பெறாத நிலையில் இவ்வருடம் 04 ஆண்டுகளுக்குமான பரீட்சையாக இம்முறை இடம்பெற்ற நிலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்ததை அவதானிக்க முடிந்தது.

2022 மற்றும் 2021 வருட உயர்தர மாணவர்கள் தவிர ஏனைய வருட மாணவர்கள் குறைந்த அளவில் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும் பரீட்சை கடமைகளுக்கு போதிய அலுவலர்கள் சமூகமளித்திருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.