நாடாளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி கூடுகிறது.

0
127

புத்தாண்டிற்குப் பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையில் அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.