நாடாளுமன்றில் உள்ள 225 பேரில் பல திருடர்கள்:ரஞ்சன் ராமநாயக்க

0
108

நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடைபெற்றால் நெருக்கடி ஏற்படும்.
எனவே பெரும்பாலும் விரைவில் பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அதாவது இந்த நாட்டை வீணடித்த 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனென்றால் 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர்.
இந்த நாட்டில் ஊழல்வாதிகளே இவ்வாறான கள்வர்களை பாதுகாக்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மணல்கொள்ளையர்கள், கப்பம் பெறுவோர் தரமற்ற மருந்து இறக்குமதி செய்பவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
நாட்டின் வரலாற்றில் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் உள்ளார்.
இந்த நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்துவதாகவே இதனை கருத வேண்டும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.