நாடாளுமன்ற அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக பத்மநாதன் சத்தியலிங்கம் நியமனம்!

0
12

இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களைக் கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.