நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலை மற்றும் வங்கிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
அதற்கமைய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் இடம்பெறாததால் நோயாளர்கள் திரும்பிச் சென்றனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்தில் அமைந்துள்ள அரச வங்கிகள், தனியார் வங்கிகள் சிலவும் மூடப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.


