நாடு முழுவதும் 1500 கிலோமீற்றர் வீதி புனரமைப்பு பணி இன்று ஆரம்பம்

0
91

நாடு முழுவதும் 1500 கிலோமீற்றர் வீதி புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

ரூபா 20 பில்லியன் செலவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 3 கட்டங்களாக செயற்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

முதற்கட்டமாக 500 கிலோமீற்றர் வீதி புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாகவும், அடுத்த இரண்டாம் கட்டமாக 500 கிலோமீற்றர் வீதி புனரமைக்கும் பணிகள் மார்ச் 16ஆம் திகதியும், மூன்றாம் கட்டமாக 500 கிலோமீற்றர் வீதி புனரமைக்கும் பணி ஏப்ரல் 2ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உள்ள பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களினால் இன்று இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வவுனியா மகாறம்பைக்குளம் காளிகோவில் வீதியை புனரமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் 1180 மீற்றர் நீளமான வீதி புனரமைக்கப்பட்டு காப்பற் இடப்படவுள்ளது.

இதற்காக 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கலந்த கொண்டார்.

வவுனியா அரச அதிபர் பி.ஏ. சரத்சந்திர, பிரதேசசெயலாளர் நா.கமலதாசன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், பொதுமக்கள், உட்பட பலர் நிகழ்;வில் கலந்துகொண்டனர்.