நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி காலி மாவட்டம் – யக்கலமுல்ல, நியாகம, இமதுவ, களுத்துறை மாவட்டம் – பேருவளை, கேகாலை மாவட்டம் – கலிகமுவ, குருநாகல் மாவட்டம் – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ, நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்த, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 1ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் – சீதாவக, பாதுக்கை, களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்த, காலி மாவட்டம் – அல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட, வந்துரம்ப, தவளம், கம்பஹா மாவட்டம் – அத்தனகல்லை, கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொ{ஹபிட்டிய, கேகாலை, மாவனெல்லை, அரநாயக்க, தெரணியகலை, இரத்தினபுரி மாவட்டம் – அஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.