உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை இலங்கைக்கு வருகைதந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தார்.இரு தரப்பு உறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கட்டுநாயக்க விமான நிலைத்தின் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமாரதிசநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் விஜயம் என்பதால் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.