நாட்டில் ஆய்வுகூட பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையான வசதிகள் இல்லாததால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தடைபட்டுள்ளதாகவும் இதனால் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் நோயாளர்கள் பலர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மாற்று நிலையத்தினால் சில ஆய்வுகூட பரிசோதனைகள் அந்தந்த வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவற்றின் பல ஆய்வுகூட சேவைகள் முடங்கியுள்ளதாக சுகாதார சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.