நாட்டில் எயிட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
153

நாட்டில் கடந்த 10 மாதங்களில் சுமார் 3 ஆயிரத்து 500 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 77 பேர் சிறுவர்களாவர் என்று எயிட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்திலேயே அதிகளவிலான எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பதுளையில் 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், 25 பேர் எல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.