நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் காஞ்சன

0
172

சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மசகு எண்ணெய் வாங்குவதற்கு தேவையான அந்நிய செலாவணி கிடைக்காததால் சுத்திகரிப்பு நிலையம் நேற்று முன் தினம் முதல் மூடப்பட்டுள்ளது.