நாட்டில் ஒமிக்ரோன் அலை ஏற்படும் அபாயம் அதிகரிப்பு

0
160

நாட்டில் ஒமிக்ரோன் அலை ஏற்படும் அவதான நிலைமை ஏற்பட்டுள்ளதாக, விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அந்த சேவைக்கு பொறுப்பான விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ஒமிக்ரோன் திரிபுடன் கொரோனா வைரஸ் தொற்று அலை ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை காட்டுகின்றது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்குள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,347 ஆகக் காணப்பட்டது.

நாட்டில் டெல்டா திரிபு பரவல் ஏற்பட்ட போது இவ்வாறான எண்ணிக்கையிலேயே தொற்றாளர்கள் பதிவாகினர். அவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது என்று, அவர் மேலும் தெரிவித்தார்.