நாட்டில் நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் 65,104 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 666,612 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 193 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 345,789 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு போடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 345,789 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதேவேளை, 16,664 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது