முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ தரையிறங்கியுள்ளதாக தெரியவருகின்றது
தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை வரவேற்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானநிலையம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.