நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்பு

0
546

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச் சேனை ஐஸ்மோல் பின் வீதியிலுள்ள கிணற்றிலிருந்து 04 வயது சிறுவன் ஒருவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய் தந்தையுடன் இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் குறித்த சிறுவன் காணமால் போனதாகவும் பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு சிறுவனை தேடிப் பார்த்த போது வீட்டின் முன்னாள் அமைந்துள்ள கிணற்றினுள் சிறுவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான நளீம் ஹாபில் எனும் சிறுவனே இவ்வாறு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் சாட்சியங்களை கேட்டறிந்து கொண்டாhர்.

நீதிபதியின் உத்தரவுக்கமைய சிறுவனின் சடலம் உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச் சம்பம் தொடர்பாக மட்டக்களப்பு குற்ற தடயியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயவியல் விசாரணைகளை மேற் கொண்டிருந்திருந்தனர். இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகனை மேற்கொண்டு வருகின்றனர்.