நான் வடமராட்சியான் என கஜேந்திரன் எம் பி யை மிரட்டிய மீனவ சங்கப் பிரதிநிதி!

0
214

நான் வடமராட்சியான் இங்கே வந்து என்னுடன் இவ்வாறு கதைக்க வேண்டாம் என வடமராட்சி மீனவ சங்கப் பிரதிநிதி தமிழ் மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை கைநீட்டி மிரட்டினர்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் குறித்த கூட்டத்தில் இந்திய மீனவர்களின் வருகை தொடர்பில் ஆராயப்பட்டபோது

கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நீங்கள் அந்தக் காலத்தில் இருந்து இந்தியாவில் போய் பேசுவோம் பேசுவோம் என கூறுகிறீர்கள் இங்கே கடற்படை எதற்குள்ளது இலங்கை அரசாங்கம் என்ன செய்கிறது என கேட்டு வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட போது இடையில் குறிக்கிட்ட வடமராட்சி மீனவர் சங்கப் பிரதிநிதி இங்கே வந்து குழப்ப வேண்டாம் நான் வடமராட்சியான் இங்கே வந்து உனது சேட்டையை வைக்க வேண்டாம் எனவும் அச்சுறுத்தும் பாணியில் மிரட்டியதோடு கஜேந்திரன் எம் பி யை தாக்கும் நோக்குடன் எம் பி யை நோக்கியும் வருகை தந்திருந்தார்,