நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

0
94

தென் மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நாளைய தினம் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் நாளை மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.