நாவற்குழி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கட்டில்கள் வழங்கிவைப்பு.

0
209

நாவற்குழி இடைத்தங்கல் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு கட்டில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி (யாழ்ப்பாணம்) மற்றும் யாழ் மாவட்டதிற்கான கொரோனா
வைரஸ் தொற்றுபரவல் தடுப்பு இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அதிகாரி
அவர்களின் கட்டளைக்கு ஏற்ப 52வது காலாற்படை தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ்
நாவற்குழி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் இடைத்தங்கல் சிகிச்சை மத்திய
நிலையத்திற்கான CENTRAL ENGINEERING CONSULANCY BUREAU
நிறுவனத்தின் மூலம்
2021 ஜீன் மாதம் 01ம் திகதியன்று 100 அளவிலான கட்டில்கள் வழங்கிவைக்கப்பட்டது.


52வது காலாற் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கரேந்திர பீரிஸ் அதிகாரி அவர்களின் தனிப்பட்ட இணைப்பின் மூலம் இக் கட்டில்கள் வழங்கலானது நடைபெற்றதுடன் CENTRAL ENGINEERING CONSULANCY BUREAU நிலையத்தின் Chief Operation Engineer திரு.ஏ புஸ்பராஜ் மற்றும் Operation Engineer திரு. ஏ சத்தியதாசன் அவர்களினால் மேற்படி கட்டில்கள் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி அவர்களிடம் வைபவரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்காக 52வது காலாற் படைகளின் கட்டளைத்தளபதி, பாதுகாப்பு படைகளின் தலைமையகம் (யாழ்ப்பாணம்) பிரிகேடியர் நிலைப் பொறுப்பதிகாரி, பிரிகேடியர் கட்டமைப்பு தொடர்பான
அதிகாரி, 522வது காலாற் படைத் தளபதி,523வது காலாற் படைத் தளபதி உட்பட இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி அவர்களினால் அமைக்கப்பட்டு வரும் இடைத்தங்கல் சிகிச்சை மத்திய நிலையத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் மேற்பார்வையும் செய்யப்பட்டது.