நிந்தவூர் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

0
173

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த கட்டிடமும் அதன் அருகில் உள்ள மரத்தளபாட வேலைத்தளமும் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

இதனையடுத்து கல்முனை மாநகரசபைக்கு கிடைக்கப் பெற்ற அழைப்பை தொடர்ந்து கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சம்மாந்துறை பொலிஸார் மற்றும் படையினருடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஆஷ்ரப் தாஹீர் உட்பட உறுப்பினர்களும் குறித்த இடத்திற்கு சென்று நிலையை பார்வையிட்டதுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.

எவ்வாறாயினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.