நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அபில்டன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய முக்கிய இடங்களை ஆவணப்படுத்தி பொருளாதார மேம்பாடுகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் அடங்கிய கையோடு ஒன்றினையும
நியூசிலாந்து தூதுவரிடம் ஆளுநர் கையளித்தார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ.வணிகசிங்க, ஆளுநர் செயலாளர் எல்,பீ. மதநாயக்க ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நியூசிலாந்து தூதுவர மைக்கல் அபில்டன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் விசேடமாக விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி கைத்தொழிலை விருத்தி செய்வது குறித்தும் ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.