நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமாதான நீதவான் பிறப்பு சான்றிதழை சான்றுப்படுத்தல் மற்றும் அரசியலமைப்பின் 07 ஆவது உப பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் தொடர்பில் எழுந்த சிக்கல்கள் காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் முஹம்மட் லஃபார் தாஹீர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட நீதியரசர்கள் ஆயத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.