மட்டக்களப்பு கலாவித்தகர் ஸ்ரீமதி வசந்தி நேருவின் நிருத்திய கலாலய நாட்டியப்பள்ளியின் கின்னஸ் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் கலாவித்தகர் ஸ்ரீமதி வசந்தி நேருவின் தலைமையில் நடைபெற்றது.

2021ஆம் ஆண்டு மதுரையை சேர்ந்த நாட்டிய கலாமணி முரளிதரனால் நடாத்தப்பட்ட நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக சுமார் 698 மாணவர்கள் கலந்து கொண்ட தமிழ்வர்ணம் நாட்டிய நிகழ்வு நடாத்தப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
இந்த கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்வில் நிருத்திய கலாலய நாட்டியப்பள்ளியின் 16மாணவிகள் கலந்துகொண்டு சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் போது கலைத்துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கிவரும் நடனத்துறை விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கின்னஸ் சாதனை படைத்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில்போது நிருத்திய கலாலய நாட்டியப்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.