விவேகானந்த சமுதாய அறக்கட்டளை தங்களது நன்கொடையாளர்களின் நிதியுதவி மூலமாக முதற்கட்டமாக 15 குடும்பங்களிற்கு நிலைக்கடலை உற்பத்திக்கான விதை பருப்பு மற்றும் உரம் என்பவற்றை வழங்கியுள்ளதுடன் அவர்களின் சந்தைப்படுத்தலுக்கான உதவியினையும் செய்வதற்கு முன்வந்துள்ளனர்.
கனடாவில் வசிக்கும் இ.ஏகாம்பரம் என்பவரின் பிறந்தினத்தை முன்னிட்டு சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் (கிரான்) பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு முன்னிலையில் அப்பிரதேச விவசாய போதனாசிரியர் க.நிசாந்தன் ஆலோசனையுடன் நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டது.விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் நிதியுதவி வழங்கிய புலம் பெயர் சமுத்தினருக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.