
பாதுக்க, வத்தரக பிரதேசத்தில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபரினால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர் ஏதோ தேவைக்காக அதிகாலையில் வீட்டின் முன் அறைக்கு சென்றபோது, யாரோ கூரிய ஆயுதத்தால் அவரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூரிய ஆயுதங்களால் பலத்த காயமடைந்த பெண், பாதுக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாதுக்க, வடரெக்க பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரபதன பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதம் மற்றும் தடியால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் உரிய இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை தம்புள்ளை மற்றும் கல்கிரியாகம வைத்தியசாலைகளில் அனுமதித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 69 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக தந்தை மற்றும் மகன் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் 42 வயது மற்றும் 62 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.