நிவாரண உதவிக் கொடுப்பனவு உயர்த்தக் கோரிக்கை : ஞா.சிறிநேசன்

0
262

அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண உதவிக் கொடுப்பனவு வழங்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முடக்கப்பட்ட நிலையில் காலத்தின் தேவைகருதி மக்களின் உயிரை பாதுகாக்கின்ற விடயத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் நினைவுகூரும் போது பரவும் கொரேனா வைரஸ் குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளின் போது பரவாதா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேன் கேள்வி எழுப்பியுள்ளார்.