நீச்சல் போட்டியில் அதிக பதங்கங்களை சுவீகரித்தது தம்பாட்டி பாடசாலை

0
277

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டியில் 10 பதங்கங்களை ஊர்காவற்றுறை யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சுவீகரித்தள்ளது.

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டி கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது.

இதில் 3 முதலிடங்களையும், 4 இரண்டாமிடங்களையும், 3 மூன்றாமிடங்களையும், 5 நான்காமிடங்களையும் குறித்த பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற 10 மாணவர்கள் தேசிய மட்ட நீச்சல் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.