நீண்ட நாட்களின் பின் 53 பயணிகளுடன் இலங்கை வந்த முதலாவது விமானம்!

0
610

நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்காக இலங்கை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று முதலாவதாக இலங்கை வந்தடைந்துள்ளது.

இந்த விமானம் இன்று அதிகாலை 2.15 மணிக்கு கட்டார் நாட்டின் டோகாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த விமானத்தின் மூலம் 53 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த விமானத்திற்கு பின்னர் இன்று காலை 4.05 க்கு கட்டார் டோகாவில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமாக UL 2018 என்ற விமானம் வந்திருந்தது.

இந்த விமானத்தின் மூலம் 116 பயணிகள் கட்டுநாக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையங்கள் திறக்கப்பட்டாலும் வியட்நாம் மற்றும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை வர அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அந்த நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சகல விமான நிறுவனங்களுக்கும் இதுபற்றி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ட்ரான்சிட் முறையின் கீழ் வருகை தரும் பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும்.