நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் வருகை!

0
444

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இன்று காலை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
இன்று காலை, யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சருக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்து பௌத்த கலாசார பேரவை பொதுச் செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பை ஏற்று, இந்து பௌத்த கலாசார பேரவையில், இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான, சான்றிதழ் வழங்கும் வைபவத்தில், பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வருகை தந்தார்.
இந்த நிலையில், சில தினங்கள், யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் அமைச்சர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.