நுவரெலியா – டியநில்லை கதிர்வேலாயுத சுவாமி கும்பாபிஷேகம்

0
117

நுவரெலியா மாவட்டம் டியநில்லை மேல்ப்பிரிவு தோட்டம் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மஹா கும்பாபிஷேகம் இன்று காலை இடம்பெற்றது.

காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு, நான்காம் கால யாகபூஜை செய்து பிரதான கும்பம் உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

தோட்ட மக்கள், இந்து இளைஞர் மன்றத்தினர், ஆலய பரிபாலன சபையினர் எனஆயிரக்கணக்கான பக்தர்கள் கதிர்வேலாயுத சுவாமி மஹா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர்.