நுவரெலியா ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட, பொகவந்தலாவ பொகவான கில்லானி தமிழ் வித்தியாலயத்தில், தரம் 3ல் உள்ள மாணவர்களில் 7 பேர், திடீரென மயக்கமடைந்த நிலையில், நான்கு மாணவர்கள், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையில் காலை நேர கூட்டத்தை முடித்த பின்னர், கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே, தரம் 3ல் உள்ள மாணவர்கள் ஏழு பேர், திடிர் மயக்கம் அடைந்ததாகவும், அதில் நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மாணவர்கள் அச்சமடைய தேவையில்லை எனவும், வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, மாணவர்களுக்கான காலை கூட்டம் இடம்பெற்று கொண்டிருந்த
போதே, இந்த ஏழு மாணவர்களும் திடிரென மயககமடைந்ததாக, பொலிஸாரின்
ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில், மேலதிக விசாரனைகளை, பொகவநதலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Home மலையக செய்திகள் நுவரெலியா பொகவான கில்லானி தமிழ் வித்தியாலயத்தில், திடீரென மயக்கமடைந்த மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி