நுவரெலியா – மெரயா கௌலஹேன புனித பிரான்ஸிஸ் அசிசீயார் திருவிழா

0
118

நுவரெலியா மாவட்டம் மெரயா கௌலஹேன புனித பிரான்ஸிஸ் அசிசீயார் பங்கு ஆலயத்தின் திருவிழா நேற்று ஆலயத்தின் பங்குதந்தை அருட்திரு ஜோன் வின்ஸ்டன் தலைமையில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலி கண்டி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ஜோசப் வியானி ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அத்துடன் இத்தாலி ஆசிசி திருத்தலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தூய பிரான்ஸ் அசிசியாரின் திருசுருபம், மெரயா நகர் முழுவதும் பவனியாக எடுத்து வரப்பட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கப்பட்டது. திருவிழாவில் மெராயா பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.