
நுவரெலியா அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகை தரும் சிறுத்தைகள், கால்நடைகளை உணவாக்கிக்கொள்கின்றன. கடந்த 7ம் திகதி இரவு நியூ கொலனி பகுதியில் எஸ்.நாகராஜ் என்பவரின் வீட்டுக்கு வந்து செல்லும் காட்சி, அவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.