நெடுந்தூர பேரூந்து நிலையம் யாழ் மாநகர முதல்வரின் முயற்சியால் மக்கள் பயன்பாட்டிற்கு.

0
226

நெடுந்தூர பஸ் நிலையம் யாழ் மாநகர முதல்வரின் முயற்சியில் மக்கள் பயன்பாட்டிற்கு !

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அமைத்து யாழ் மாநகர சபையிடம் கையளிக்கப்பட்ட புதிய நெடுந்தூர பஸ் தரிப்பிடம் C.T.B மற்றும் தனியார் பஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பல காலமாக செயல்படாமல் இருந்த நிலையில் பல முயற்சிகள் எடுத்த போதும் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களின் முயற்சியில் யாழ் கொழும்பு தனியார் பஸ்கள் தற்போது குறித்த பஸ் தரிப்பிடத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக பரீட்சார்த்தமாக பஸ் சேவை நடத்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு புதிய பஸ் நிலையம் பழைய பண்ணையில் இருந்த பஸ் நிலையத்தை விட அதிக வசதிகள் கிடைப்பதாகவும் குறிப்பாக மலசலகூட வசதிகள் மற்றும் மழை நேரத்தில் ஒதுங்கி இருப்பதற்கு வசதிகள் இருப்பதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தனர். பஸ் உரிமையாளர்கள் தாம் தொடர்ந்தும் குறித்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயங்குவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.