நெலுவ துலியெல்ல தேயிலை தொழிற்சாலையின் விறகு கொட்டகையில் தீ

0
162

ஆதாரதெனிய தேயிலை தொழிற்சாலை குழுமத்துக்கு சொந்தமான நெலுவ துலியெல்ல தேயிலை தொழிற்சாலையின் விறகு கொட்டகையில் இன்று (15) அதிகாலை தீ பரவியதால் மரக்கட்டைகள் முழுவதும் எரிந்து நாசமானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுடன் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தொழிற்சாலையின் விறகு அடுப்பிலிருந்தே தீ பரவியதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தீயினால் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமோ, உயிர் ஆபத்தோ ஏற்படவில்லை.

தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.