கிளிநொச்சி – அக்கராயன் குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை அறுவடை அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லுக்கு உரிய விலை இன்றியும் நெல்லை சந்தைப்படுத்த முடியாமலும் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அக்கராயன் குளத்தின் கீழ் உள்ள 1746 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் நாற்பது வீதமான அறுவடை நிறைவடைந்துள்ள போதும் இதுவரை விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை மாவட்டத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்களோ அல்லது நெல் சந்தைப்படுத்தும் சபையோ விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யாத நிலையில்இ தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களும் வர்த்தகர்களும் மிக குறைந்த விலைகளில் நெல்லை கொள்வனவு செய்வதாகவும்இ இதனால் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.